பிரபுதேவாவின் மனைவி ரம்லத் மற்றும் பெண்கள் அமைப்புகள் தாக்கக் கூடும் என்ற பயம் காரணமாக, பலத்து பாதுகாப்புடன் விளம்பரப் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் நயன்தாரா.
நயன்தாரா-பிரபுதேவா காதல் மிகத் தீவிரமாகி, திருமணத்தில் வந்து நிற்கிறது. திருப்பதி கோவிலில் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்தத் திருமணத்துக்கு சம்மதிக்க ரம்லத்துக்கு ரூ.3 கோடி ரொக்கமும், அண்ணாநகரில் உள்ள வீட்டையும் கொடுத்து சமரசம் செய்து விட்டதாக ஏற்கனவே வதந்தி பரவியது. நயன்தாரா ரூ.85 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லசை பிரபுதேவா மூலம் ரம்லத்துக்கு கொடுத்ததாகவும் கூறப்பட்டது. இதையெல்லாம் ரம்லத் மறுத்துள்ளார். அவர் புகார் அளித்தால் நயன்தாரா, பிரபு தேவா இருவரையும் கைது செய்வோம் என்று போலீசாரும் கூறியுள்ளனர்.
ரம்லத் புகார் தராவிட்டாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் சங்கங்கள் கூறி வருகின்றன. நயன்தாராவுக்கு கறுப்புக்கொடி காட்டுவோம் என்று ஜான்சிராணி பெண்கள் பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் விளம்பர படமொன்றில் நடிப்பதற்காக நேற்று நயன்தாரா சென்னை வந்தார். வழக்கமாகத் தங்கும் பார்க் ஓட்டலை விட்டுவிட்டு, ரகசிய இடத்தில் தங்கிய அவர், கேளம்பாக்கத்தில உள்ள ஒரு ஸ்டுடியோவில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்றார். 3 நாட்கள் இந்த படப்பிடிப்பு நடக்கிறது. சென்னையில் உள்ள பிரபல ஜவுளி விற்பனை நிறுவனம்தான் இந்த விளம்பர படத்தை தயாரிக்கிறது.
பெரும் தொகையைப் பெற்றுக் கொண்டு இந்தப் படத்தில் அவர் நடிக்கிறார். காரணம் கடனில் சிக்கியுள்ள பிரபு தேவாவுக்கு உதவுவதற்காக என்று கூறப்படுகிறது.
இந்தப் படப்பிடிப்பில் ரம்லத் மற்றும் பெண்கள் சங்கத்தினர் புகுந்து ரகளையில் ஈடுபடலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், நயன்தாராவுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தனியார் செக்யூரிட்டிகள் படப்பிடிப்பை சுற்றி நிறுத்தப்பட்டு உள்ளனர்.
Tuesday, October 5, 2010
நயன்தாராவுக்கு பலத்த பாதுகாப்பு...!
Author: manikandan
| Posted at: 11:54 AM |
Filed Under:
Celebrity Love story,
gossips
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment