மேடையில் பெருமையடித்தவன் வீட்டுக்கு வந்து வெறும் வயிற்றோடு படுத்த கதையாக இருக்கிறது ரஜினியின் எந்திரன் சம்பள விவகாரம். தமிழ்நாடு மட்டுமின்றி ஜப்பான், மலேசியா, அமெரிக்கா என ஜினியின் மார்க்கெட் உலகம் முழுவதும் வியாபித்து கிடக்கிறது. தற்போதைய நிலவரப்படி ரஜினி வாங்கும் சம்பளம் 25 கோடியிலிருந்து 40 கோடி வரை என்கிறார்கள். பல முறைகளின்படி தனது சம்பளத்தை நிர்ணயித்துக்கொள்வாராம் ரஜினி. எந்திரனுக்காக சதவீத அடிப்படையில் சம்பளம் பேசியுள்ளார் ரஜினி. படம் தொடங்குவதற்கு முன்னதாக ஒப்பந்தம் செய்துகொண்டபோது எந்திரன் எத்தனை கோடிக்கு வியாபாரம் ஆகிறதோ அதில் 20 சதவீதத்தை ரஜினி சம்பளமாக தருவதாக சன்பிக்சர்ஸ் கூறியதாம். ரஜினியும் இதற்கு சம்மதித்தார். மலேசியாவில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய கலாநிதிமாறன், 'படத்தின் மீதுள்ள அக்கறையில் இதுவரை தனது சம்பளத்தைகூட ரஜினி வாங்கவில்லை' என்று பெருமையாக சொன்னார். இப்போது படமும் முடிந்து 250 கோடிக்கு வியாபாரமும் ஆகிவிட்டதாம். ஆனால் ரஜினியின் கைக்கு இதுவரை சம்பளம் வந்து சேரவில்லையாம். 1001 ரூபாய் அட்வான்ஸ் தவிர ரஜினியின் சம்பளம் அப்படியே நிற்கிறதாம். சமீபத்தில் கலாநிதியிடம் ரஜினி சம்பளம் பற்றி பேச்செடுத்தபோது, படம் வெளியான பிறகு எவ்வளவு வசூலாகிறதோ அதை கணக்கில்கொண்டு உங்கள் சம்பளத்தை முடிவுசெய்துகொள் ளலாம் என்று பேசியுள்ளதாக தெரிகிறது. |
Tuesday, October 5, 2010
ரஜினி ஏன் இன்னமும் சம்பளம் வாங்கவில்லை ?
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment