Tuesday, October 5, 2010
நடிகை சினேகாவிற்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.,
Author: manikandan
| Posted at: 11:42 AM |
Filed Under:
Kollywood News
|

பெங்களூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தன் மகளுக்கு தொடர்ந்து ஆபாச, மிரட்டல் எஸ்.எம்.எஸ்., அனுப்பி வருவதாக நடிகை சினேகாவின் தந்தை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். சென்னை, தி.நகர், வடக்கு போக் சாலையைச் சேர்ந்தவர் ராஜாராம் நாயுடு நடிகை சினேகாவின் தந்தை. இவர், நேற்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது: எனது மகளுக்கு பெங்களூரைச் சேர்ந்த ராகவேந்திரா என்ற வாலிபர் ஏற்கனவே அடிக்கடி ஆபாச, மிரட்டல் எஸ்.எம்.எஸ்.,கள் அனுப்பி வந்ததால், புகார் செய்யப்பட்டு, சைதாப்பேட்டை கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், சமீப காலமாக தொடர்ந்து மீண்டும் அடிக்கடி எஸ்.எம்.எஸ்.,கள் அனுப்பி டார்ச்சர் செய்து வருகிறார். அதனால், சினேகா மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார் என்றார். புகாரை பெற்றுக் கொண்ட கமிஷனர் ராஜேந்திரன், உளவுப்பிரிவு போலீசாரை விசாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment