பிரபல்யமான நடிகர்கள் தங்களுக்கென்று சொந்த தயாரிப்பு நிறுவனங்களை வைத்திருப்பதொன்றும் புதிதல்ல. சொந்தமாக தயாரிப்பு நிறுவனங்களை வைத்திருப்பதால் பல தடங்கல்களை இல்லாமல் செய்யலாம் என்பது நடைமுறையில் கண்ட உண்மை என்பதால், பல முன்னணி நடிகர்களும் தங்களுக்கென்று சொந்த தயாரிப்பு நிறுவனங்களை நிறுவத் தொடங்கியுள்ளனர்.
அந்தவகையில் நடிகர் அஜித்குமாரும் தனக்கென சொந்தமாக தயாரிப்பு நிறுவனமொன்றை உருவாக்க தீர்மானித்திருக்கிறாராம். அந்நிறுவனத்திற்கு 'குட்வில் என்டெர்டெய்ன்மென்ட்' (Goodwill Entertainment) என்று பெயர் வைத்திருக்கிறாராம்.
தனது நண்பர்கள் சிலரின் ஒத்துழைப்புடன் உருவாக்கவிருக்கும் இந்த தயாரிப்பு நிறுவனத்தினூடாக படங்களை தயாரிக்கும் உத்தேசமும் இருக்கிறதாம். முதன்முதலாக அஜித்தின் படத்தினை இந்நிறுவனத்தினூடாக தயாரிப்பது பற்றி கலந்தாலோசிக்கப்படுகிறதாம்.
அநேகமாக அந்தப் படத்தின் அறிவிப்போடு தனது சொந்த நிறுவனத்தையும் அறிமுகப்படுத்த அஜித் ஆலோசிப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tuesday, October 5, 2010
சொந்த நிறுவனம் தொடங்குகிறார் அஜித்
Author: manikandan
| Posted at: 11:40 AM |
Filed Under:
ajith,
Kollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment