Saturday, September 25, 2010

நடனக்காரர் மனைவி மவுனத்தின் பின்னணி!

நடனக்காரரும், நயன நடிகையும் காதலிக்கிறார்கள் என்ற கிசுகிசுவில் தொடங்கி, கல்யாணம் செய்து கொண்டார்கள் என்ற வதந்தி வரை பல தகவல்கள் அவ்வப்போது வெளியாகி கோடம்பாக்கத்தை பரபரப்புக்குள்ளாக்கிய காலம் போய்... நடனக்காரரே காதலை ஒப்புக் கொண்டு பேட்டியளித்ததுடன், கல்யாண தேதியையும் விரைவில் அறிவிக்கப்போவதாக கூறி விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். காதல் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஒருபுறம் இருந்தாலும் காதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் நயனத்தை கரம்பிடிக்க முடியுமா? என்று பட்டிமன்றமே நடந்து வருகிறது கோடம்பாக்கத்தில்.

இந்த பட்டிமன்றத்துக்கு நடுவே இன்னொரு கேள்வியும் வந்து விழுகிறது. நடனக்காரருக்கும், நயனத்துக்கும் காதல் என்ற செய்தி கேட்டு வெகுண்டெழுந்த காதல் மனைவி, நயனத்தை கல்யாணம் பண்ணப்போவதாக நடனம் அறிவித்த பிறகும் அமைதி காப்பது ஏன்? என்பதுதான் அந்த கேள்வி. விசாரித்து பார்த்தால், காதல் மனைவி எதிர்பார்த்ததை விட திருப்தியாக செட்டில்மென்ட் முடிந்து விட்டதாகவும், அதனால்தான் அவர் இப்போது வாய்மூடி மவுனியாக மாறி விட்டதாகவும் கிசுகிசுக்கிறார்கள். முன்பெல்லாம் பத்திரிகையாளர்களிடம் வலிய வந்து பேசும் மனைவி, இப்போது பத்திரிகையாளர்களிடம் சிக்காமல் எஸ்கேப் ஆவதன் ரகசியமும் இதுவாகத்தான் இருக்குமோ?

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails