Saturday, September 25, 2010

ரஜினி - உறுதியும், அர்ப்பணிப்பும் கொண்ட கலைஞன்

பொதுவாக மேக்கப், அதிக சிரத்தை எடுத்து பொறுமையுடன் நடிப்பது போன்றவற்றுக்கு கமல்ஹாஸனைத்தான் உதாரணமாகச் சொல்வார்கள். ஆனால் அதை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலையை உருவாக்கியிருக்கிறார் ரஜினி, எந்திரன் படம் மூலம்.

இந்தப் படத்துக்காக அவர் மிக ரிஸ்கான ஸ்டன்ட் காட்சிகளில்கூட டூப் இல்லாமல் நடித்ததாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். ஹாலிவுட் ஸ்டன்ட் கலைஞர்களை அருகில் வைத்துக் கொண்டு, அவர்கள் செய்து காட்டிய அத்தனை சண்டைக் காட்சிகளிலும் ஒரிஜினலாக ரஜினியே நடித்துள்ளதாக ஷங்கர் கூறியுள்ளார்.

மேலும், ரோபோவை உருவாக்கும் ஒரு காட்சியில், ரஜினி ஒரு பாத்டப்புக்குள் அமர்ந்தபடி, தலையை மட்டும் ஒரு பலகைக்கு வெளியே நீட்டிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்களாம். இந்தக் காட்சியை எடுத்து முடிக்க 17 மணி நேரமானதாம். அவ்வளவு நேரமும் சலித்துக் கொள்ளாமல் பொறுமையாக இருந்த இடத்திலேயே அமர்ந்திருந்தாராம் ரஜினி.

'அதுதான் ரஜினி சாரின் தனித்தன்மை. அவரைப் போல உறுதியும், அர்ப்பணிப்பும் கொண்ட கலைஞனை நான் பார்த்ததில்லை..' என்று ஷங்கர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails