சிம்புவுக்கு திருமணம் எப்போது என்ற கேள்விக்கு சிம்புவின் தந்தையும் நடிகருமான விஜய டி.ராஜேந்தர் பதில் அளித்துள்ளார். சிம்புவின் தங்கை இலக்கியாவுக்கு ரகசியமாக திருமணம் நடந்து விட்டதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இதனை மறுத்து ராஜேந்தர் அளித்துள்ள பேட்டியில், இலக்கியா எம்.பி.ஏ., படித்திருக்கிறார். அவருக்கு ரகசிய திருமணம் எதுவும் நடக்கவில்லை. மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். படித்த - பண்புள்ள மாப்பிள்ளையாக தேடி வருகிறோம், என்று கூறியுள்ளார். சிம்பு திருமணம் பற்றி கூறுகையில், சிலம்பரசன் தங்கையின் திருமணம் முடிந்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருக்கிறான். அவனுக்கும் நிறைய பெண் வீட்டார் வந்து கொண்டிருக்கிறார்கள். நான், ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவன். அவனுக்கு பொருத்தமான ஜாதகத்தை தேடிக் கொண்டிருக்கிறேன். தமிழ் இலக்கியா திருமணம் முடிந்த பிறகு, சிலம்பரசனின் திருமணம் நடைபெறும், என்று விஜய டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
Sunday, September 26, 2010
சிம்புவுக்கு திருமணம் எப்போது? டி.ஆர்., பதில்
Author: manikandan
| Posted at: 2:04 AM |
Filed Under:
Kollywood News,
simbu
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment