Saturday, September 25, 2010
தோனி போய் ஆர்யா வந்தார் டும் டும் டும்
Author: manikandan
| Posted at: 10:15 AM |
Filed Under:
gossips
|

நடிகை லட்சுமிராய்க்கும் கிரிக்கெட் கேப்டன் தோனிக்கும் காதல் என்ற கிசுகிசுவை மூழ்கடித்து விட்டது தோனியின் திருமணம். தனது பள்ளித் தோழியை மணம் முடித்த தோனி, திருமணத்துக்கு முன் லட்சுமிராயுடன் நெருக்கமாக பழகியதும், ஒன்றாக ஊர் சுற்றுவதுமாக இருந்து வந்தனர். இதனால் காதல் கிசுகிசு பரவியது. ஆனால் யாருமே சற்றும் எதிர்பாராத வகையில் தோனி திருமணம் நடந்தேறி விட்டது. இந்நிலையில் லட்சுமிராயைச் சுற்றி புது வதந்தி ஒன்று உலவ ஆரம்பித்து விட்டது. அந்த கிசுகிசுவில் லட்சுமிராயுடன் இணைத்து பேசப்படுபவர் நடிகர் ஆர்யா. இதுபற்றி லட்சுமிராயிடம் கேட்டால், மூச்சு விடாமல் சிரிக்கிறார். தோனிக்கு கல்யாணம் ஆகி விட்டதால், இப்போது ஆர்யாவை என்னோடு சேர்த்து விட்டார்கள் போலும். ஆர்யா எனக்கு ரொம்ப நல்ல நண்பன். எங்கள் குரூப்பில் அவனும் இருக்கிறான். எங்கள் இரண்டு பேரையும் பற்றி அவ்வப்போது சில கிசுகிசுக்கள் ஏற்கனவே வந்திருக்கிறது. டோனியுடன் எனக்கு காதல் என்ற பேச்சு பரவலாக இருந்ததால், ஆர்யாவுடன் என்னை அதிகமாக இணைத்து பேசவில்லை. இப்போது, மீண்டும் அந்த தகவலை பரப்பி இருக்கிறார்கள். நிஜமாகவே எங்களுக்குள் ஒன்றுமே இல்லை. உண்மையில் எங்களுக்குள் காதல் இருந்தால், `இருக்கிறது' என்று துணிச்சலாக கூறியிருப்பேன், என்று லட்சுமிராய் கூறுகிறார். நம்புவோமாக...!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment