வருமா வராதா என்ற கேள்விக்குறியுடன் இருந்த சிம்புவின் 'போடா போடி' படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு ஒரு வழியாக முடிந்துவிட்டது.
சரத்குமார் மகள் வரலட்சுமி - சிம்பு ஜோடியாக நடிக்கும் இந்தப் படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் திடீரென்று படம் நின்று போக, விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் இறங்கிவிட்டார் சிம்பு.
இப்போது மீண்டும் போடா போடியை தூசுதட்டி படமாக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளனர். இந்தப் படத்தில் வரலட்சுமியை நீக்கிவிட்டதாக இடையில் செய்தி பரவியது. ஆனால் இடையில் என்ன நடந்ததோ... வரலட்சுமியையே நாயகியாக வைத்து படத்தைத் தொடர்கின்றனர்.
படத்தில் ஒரு பாடலுக்கு சல்சா நடனம் இடம்பெறுகிறது. இந்த நடனத்தில் தேர்ச்சி பெற்றவர் வரலட்சுமி என்பதால், தானும் அந்த நடனத்தை முறைப்படி கற்றுக் கொண்டாராம் சிம்பு.
இந்த முதல் ஷெட்யூல் படப்பிடிப்பில் அந்த சல்சா நடனக் காட்சிகளைத்தான் படமாக்கினார்களாம்!
Friday, September 24, 2010
சரத் மகளுடன் சிம்பு போட்ட சல்சா ஆட்டம்!
Author: manikandan
| Posted at: 7:16 AM |
Filed Under:
Kollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment