Friday, September 24, 2010

வந்தே மாதரம்-பட விமர்சனம்

நடிப்பு: மம்முட்டி, அர்ஜுன், சினேகா, நாசர்
இசை: டி இமான்
தயாரிப்பு: பங்கஜ் புரொடக்ஷன்ஸ்
இயக்கும்: அரவிந்த் டி

படத்தின் தலைப்பப் பார்த்தாலே புரிந்துவிடும் இது எந்த மாதிரி படம் என்பது!

90களில் விஜயகாந்துக்காக வெள்ளாவியில் வேகவைத்து அடித்து துவைத்து நைந்து போன, பழைய 'ஒன்மேன் ஆர்மி தீவிரவாதிகளைப் பிடித்து நெஞ்சு நிமிர்த்தும்' கதைதான் இப்போது வந்தே மாதரமாக வந்துள்ளது.

இதற்காக 4 முழு வருடங்களையும் எக்கச்சக்க பணத்தையும், புதிய இயக்குநர் அரவிந்த் டி, தயாரிப்பாளர் மற்றும் நடிகர்கள் வீணடித்திருக்கிறார்களே என்ற ஆதங்கத்தை அடக்க முடியவில்லை.

தென் பிராந்திய உளவுத் துறை அதிகாரி கோபி கிருஷ்ணா. அவர் மனைவி சினேகா. வசதியான வாழ்க்கை. ஒரு நாள், திடீரென்று மம்முட்டியை அழைக்கும் உளவுத் துறைத் தலைவர், பாகிஸ்தான் தீவிரவாதி தென்னிந்தியாவுக்குள் ஊடுருவி விட்டதாகவும், அதை மம்முட்டிதான் முறியடிக்க வேண்டும் என்றும் (?!) கேட்டுக் கொள்கிறார்.

தென்னிந்தியாவில் நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்ட வரும் பிரதமரை (நாசர்) குண்டு வைத்துக் கொள்வதுதான் அந்தத் தீவிரவாதியின் திட்டம். இந்தத் திட்டத்தை உள்ளூர் போலீஸ் அதிகாரியான அர்ஜுடன் கை கோர்த்து எப்படி முறியடிக்கிறார் மம்முட்டி என்பதுதான், ஏகப்பட்ட கொட்டாவிகளையும் கடுப்பையும் வரவழைக்கும் க்ளைமாக்ஸ்!

இதுபோன்ற எத்தனையோ கதைகளில் மம்முட்டி அநாயாசமாக ஊதித் தள்ளிய வேடம் இது. அதனாலேயே அவர் ஒரு வித சலிப்புடன் நடித்திருப்பதாக நமக்குத் தெரிகிறது. சினேகாவுக்கு பெரிதாக வேலையில்லை. கொஞ்சம் கிளு கிளு உடைகளில் வருகிறார். டான்ஸ் போடுகிறார்... போய் விடுகிறார்.

சண்டைக் காட்சிகளில் தோன்றுவதற்காகவே அர்ஜுனிடம் கால்ஷீட் வாங்கியிருப்பார்கள் போலிருக்கிறது. அவரும் குறை வைக்கவில்லை. கண்ணிவெடியில் கால் வைக்காமல் இருக்க மரத்துக்கு மரம் தாவித் தாவி அவர் போகையில் சிரிக்காமல் இருக்க முடியல போங்க!

பிரதமராக நாசர்... சிரிக்க இன்னொரு வாய்ப்பு!

கதை இப்படி 'காமா சோமா' என்று இருப்பதாலேயே பாடல்கள், ஒளிப்பதிவு என எதிலும் ரசிகர்கள் கவனம் செலுத்தாமல் இருக்கையில் நெளியாய் நெளிவதைப் பார்க்க / உணர முடிந்தது!

பாரத மாதாவின் பெருமை சொல்லும் வந்தே மாதரம் என்ற மந்திரச் சொல்லை இப்படி வீணடித்திருக்க வேண்டாமே!

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails