தான் நடிக்கவிருந்த வேட்டை படத்தில் ஆர்யாவை நாயகனாக்கிய லிங்குசாமிக்கு பதிலடி தரும் விதத்தில் தனது புதிய படத்துக்கு வேட்டை மன்னன் என்று பெயர் சூட்டியுள்ளார் சிம்பு என்கிற எஸ்.டி.ஆர்!
லிங்குசாமி நேற்று அறிவித்த வேட்டை படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் சிலம்பரசன். ஆனால் லிங்குவும் சிம்புவும் படம் துவங்கும் முன்பே முட்டிக் கொண்டனர்.
விளைவு, அந்தப் படத்திலிருந்து சிம்பு வெளியேற, ஆர்யா நாயகனானார்.இப்போது தனது புதிய படத்தை அறிவித்துள்ளார் சிம்பு. இந்தப் படத்துக்கு வேட்டை மன்னன் என்று பெயர் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'இந்தத் தலைப்பு ரசிகர்களுக்கு ரொம்பப் பிடிக்கும் என நம்புகிறேன். காரணம், 'மன்னன்' என்பது சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத் தலைப்பு. முழுக்க முழுக்க ஆக்ஷன் படம் இது. புதிய இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகிறது. எனது நண்பர் யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்' என்றார்.
நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கும் வேட்டை மன்னனில் மூன்று நாயகிகள். இவர்களில் ஒருவர் ஹாலிவுட்டிலிருந்து அழைத்துவரப்படுகிறாராம்.
சண்டைக் காட்சிகளை ஹாலிவுட் ஸ்டன்ட் குழு கவனிக்கிறது
Friday, September 24, 2010
லிங்குசாமிக்கு சிம்புவின் பதிலடி!
Author: manikandan
| Posted at: 1:25 AM |
Filed Under:
Kollywood News,
simbu
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment