அஞ்சலியிடம் எதை வேணும்னாலும் கேட்கலாம். அந்த ஒரு கேள்வியைத் தவிர. அப்படி கேட்டால் அழாத குறையாக கண்களை கசக்குவார் அவர். அதென்னா பொல்லாத கேள்வி. கல்யாணம் எப்போ என்ற கேள்வியாக இருக்கலாமோ என்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லை.
ஊர்ல இருக்கிற எல்லா நடிகைக்கும் நல்ல நல்ல கதாநாயகர்கள் கிடைக்கிறாங்க. ஆனா உங்களுக்கு மட்டும் புதுமுகமா மாட்றாங்களே, ஹையய்யோ...ங்கிறதுதான் அந்த கேள்வி. கண்ணை கசக்கினாலும் பதிலை சரியா சொல்லிட்டுதான் அந்த வேலைய செய்யுது பொண்ணு. நிஜம்தான் சார். ஆனால் எனக்கொரு திருப்தி இதுல இருக்கு. நடிக்க வரும்போது எல்லாரும் புதுமுகம்தான்.
வந்த பிறகுதான் பெரிசு சிறுசு எல்லாம். நான் கற்றது தமிழ் படத்துல நடிக்க வரும்போது ஜீவா பெரிய நடிகர். இந்த புதுமுகத்தோட நான் நடிக்கறதான்னு ஒதுங்கியிருந்தா இன்னைக்கு இந்த அஞ்சலி உங்க முன்னாடி நின்னுருக்க மாட்டா. அவரு செஞ்சதைத்தான் நான் இப்போ செய்யுறேன். என்னை பொறுத்தவரை கதை நல்லாயிருக்கணும். அது போதும். மற்றபடி புது நடிகரா, பெரிய நடிகரா என்று நான் யோசிப்பதே இல்ல என்றார்.
முன்பு மாதிரி அஞ்சலியை பார்த்த வேகத்தில் பக்கத்தில் போய் ஆட்டோகிராப் வாங்கிவிட முடியாது. புதுசா சில இளைஞர்கள் வாட்ட சாட்டமா வர்றாங்க. அத்துமீறி பக்கத்துல வந்தா கொத்தா அள்ளி எறிஞ்சுருவாங்களாம். கொஞ்ச நாளா ரசிகர்கள் தொந்தரவு அதிகமா இருக்கறதாலதான் இப்படி ஒரு ஏற்பாடு என்றார். ரொம்ப பிகு பண்ணிக்காதீங்க.. ரசிகர்கள் இல்லன்னா நீங்க ஜீரோதான்
Friday, September 24, 2010
செக்யூரிட்டியுடன் வலம் வரும் அஞ்சலி!
Author: manikandan
| Posted at: 1:27 AM |
Filed Under:
Kollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment