திரைப்படங்களில் ஆபாசமாக நடிப்பது தொடர்பாக நடிகை மல்லிகா ஷெராவத் மீது தொடரப்பட்டுள்ள வழக்குக்கு தடை விதிக்க முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
ஆபாசமாக நடித்ததாக மல்லிகா ஷெராவத்துக்கு எதிராக இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 291-ன் கீழ் வழக்குப் பதிவுசெய்யக் கோரி யாவத்மால் மாவட்டத்தில் உள்ள பந்தர்காவ்டா முதல் வகுப்பு ஜூடிசியல் நீதிமன்றத்தின் முன்பு ரஜினிகாந்த் போரிலே என்பவர் 2009-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இவ்வழக்கு தொடர்பாக மல்லிகாவுக்கு இந்த நீதிமன்றம் 2010 ஏப்ரல் 3-ம் தேதி சம்மன் அனுப்பியிருந்தது. எனினும் நீதிமன்றத்தில் மல்லிகா ஆஜராகவில்லை.
'ஷாதி கே பெஹலே', 'மர்டர்' மற்றும் 'மான் கயா முகல்' 'அஸம்' போன்ற படங்களில் மல்லிகா ஷெராவத் ஆபாசமாக நடித்ததாகவும், அது இளைஞர்களையும், சமுதாயத்தையும் பெரிதும் பாதித்துள்ளதாகவும், பணம் சம்பாதிப்பதற்காகத்தான் அவர் இப்படி நடித்துக்கொண்டிருக்கிறார் என்றும் ரஜினிகாந்த் போரிலே தனது மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.
தற்போது அவ்வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி மல்லிகா ஷெராவத் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.கோடே, இதுதொடர்பாக மகாராஷ்டிர அரசுக்கும், ரஜினிகாந்த் போரிலேவுக்கும் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்
Thursday, September 23, 2010
ஆபாசமாக நடிப்பதற்கு தடையில்லையாம்-தடை விதிக்க முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
Author: manikandan
| Posted at: 9:31 AM |
Filed Under:
Bollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment