பிற மொழிப் படங்களால் கடுமையாக பாதிக்கப்படுவதாக கன்னடத் திரையுலகினர் புலம்பி வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் எந்திரன் படம் திரைக்கு வரும் அதே நாளில் கான பஜனா என்ற கன்னடப் படத்தை திரையிடுகின்றனர்.
கன்னட சினிமாவுக்கு பிற மொழிப் படங்கள் குறிப்பாக தமிழ், இந்தி தெலுங்குப் படங்கள் கடும் போட்டியாக உள்ளன.
ஸ்ரீநகர் கிட்டி நடித்த கன்னடப் படம் மலே பரலி மஞ்சு இரலிக்கு நல்ல விமர்சனம் வந்தபோதிலும் அது தோல்வி அடைந்தது. அதற்கு காரணம் அதேசமயம் வெளியான பெரும் பொருட்செலவில் தயாரான தெலுங்குப் படம் மகதீரா.
அதேபோல இந்த ஆண்டு வெளியான ஹிந்திப் படங்கள் கைட்ஸ் மற்றும் ராவண் ஆகியவவையும் கன்னடப் படங்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கர்நாடகா பிலிம் சேம்பர் ஆப் காமர்சின் கடும் முயற்சி பிளஸ் முட்டுக்கட்டையால் அது நடக்கவில்லை.
இந்த நிலையில், தற்போது பிரஷாந்த் தயாரித்துள்ள கான பஜனா எந்திரனுடன் போட்டியிட களம் இறக்கப்படுகிறது. எந்திரன் ரிலீஸாகும் அதே அக்டோபர் 1ம் தேதியன்று கான பஜனாவையும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்கின்றனர்.
தமிழில் உருவாகி, ஹிந்தியிலும், தெலுங்கிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள ரஜினி காந்த், ஐஸ்வர்யா நடித்துள்ள எந்திரன் படம் கர்நாடகாவில் ரூ. 9.75 கோடிக்கு விநியோக உரிமை விலை போயுள்ளது.
எந்திரன் வெளியானாலும் கூட அதைப் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் கான பஜனாவை வெளியிடுகின்றனராம்.
லவ் குரு குழுவின் முயற்சியில் உருவாகியுள்ள கான பஜனாவில் தருண், ராதிகா பன்டிட், திலிப் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையும், நகைச்சுவையும் பிரதானமாக உள்ளதாம் இப்படத்தில்.
எந்திரனின் காந்த அலையில் சிக்கி கான பஜனா மூழ்குமா இல்லை கன்னட ரசிகர்களை குஷிப்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Monday, September 27, 2010
எந்திரனுக்குப் போட்டியாக களமிறக்கப்படும் கன்னடத்து கான பஜனா!!!
Author: manikandan
| Posted at: 9:43 PM |
Filed Under:
enthiran,
Kollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment