Monday, September 27, 2010

வேலாயுதத்துக்கு அடுத்து... விரைவில் விஜய் அறிவிப்பு!

வேலாயுதம் படத்துக்குப் பிறகு விக்ரம் குமார் இயக்கும் படத்திலும், அதற்கடுத்து சீமான் இயக்கத்தில் பகலவனிலும் நடிக்கிறார் விஜய்.

இந்த இரு படங்களையும் குறுகிய காலத்தில் முடித்து வெளியிடவேண்டும் என்றும் விஜய் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

விஜய் நடித்த காவலன் படம் தீபாவளிக்குப் பிறகு வெளியாகும் எனத் தெரிகிறது.

அடுத்ததாக ஜெயம் ராஜா இயக்கும் வேலாயுதம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு [^] விரைவில் முடிந்துவிடும் எனத் தெரிகிறது.

இந்தப் படத்துக்குப் பிறகு யாவரும் நலம் விக்ரம் குமார் இயக்குகிறார். நடிகர் [^] விக்ரம் நடிக்கவிருந்த படம் இது. ஏ எம் ரத்னம் தயாரிக்கிறார். தனக்கு கில்லி என்ற பெரிய வெற்றிப் படம் தந்த ரத்னத்துக்கு உதவி, விஜய் தானாகவே முன்வந்து நடித்துத் தரும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் முடிந்ததும் சீமான் இயக்கத்தில் பகலவனில் நடிக்கிறார். இதற்கிடையே 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக்கிலும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இந்தப் படம் எப்போது துவங்கும் என்பது குறித்து ஏதும் ஐடியா இல்லாததால், கைவசம் உள்ள படங்களை முடிப்பதில் வேகம் காட்டுகிறார் விஜய்.

2011-ல் இவற்றை முடித்துவிட்டு இரண்டு பெரிய பட்ஜட் படங்களில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails