திரைவட்டாரத்தில் பெரிய சர்ச்சையை கிளப்பிய சிம்புவின் இரண்டாவது காதல் ‘வாலிபன்’ என்ற பெயரில் படமாகிறது. இதற்கான போட்டோ செஷன் லண்டனில் நடந்து முடித்துள்ளது.

சிம்பு முதன் முதலில் கதை, திரைக்கதை அமைத்து நடித்திருந்தப் படம் ‘மன்மதன்’. இந்தப் படம் உருவாகக் காரணம் சிம்புவின் முதல் காதல் தோல்வியின் தாக்கம் என்று சொல்லப்பட்டது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தனது கதை, திரைக்கதைக்கு கிடைத்த இந்த வெற்றியினால் இயக்குனாராகவும் மாறினார் சிம்பு.
அப்படி அவர் முதன் முதலாக இயக்கி நடித்த ‘வல்லவன்’படத்தின் வளர்ச்சியின்போதுதான் நயன்தாராவுக்கும் சிம்புவுக்கும் இடையே காதலும் வளர்ந்தது.
அப்போது திரும்பிய திசையெல்லாம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட காதல் ஜோடி இவர்கள்தான். ஒட்டி உறவாடிய இவர்கள் காதல் ஒருகட்டத்தில் சிக்கலில் சிக்கி சின்னாபின்னமானது. இந்தக் காதல் வம்பினால் சிலமாதங்கள் மிகவும மனக்குழப்பத்துக்கு ஆளானார் சிம்பு. இதன் பின்பு நயன்தாராவுடன் பேசுவதற்குகூட வாய்ப்பில்லாமல் போனது.

இதனால் சிம்பு பங்கேற்ற பொது மேடை ஒன்றில் ‘லூசு பெண்ணே... லூசு பையன் உன்னால தான் லூசா சுத்துறான்...’ என்று பாடலாகபாடி நயன்தாராவுக்கு தனது வருத்ததை வெளிப் படுத்தினார். ஆனால் நயன்தாரா அதற்கெல்லாம் மசியவில்லை. பிரிந்தது பிரிந்ததுதான் என்று சிம்புவைவிட்டு நிரந்தரமாக விலகிவிட்டார். தற்போது பிரபு தேவாவுடன் காதல் நடனம் ஆடிவருவது நடப்பு செய்தி.
இப்படியான சிம்புவின் இரண்டாவது காதல் தான் ‘வாலிபன்’ படத்தின் கதைக்கருவாம். சிலம்பாட்டம் படம் முடிந்த பிறகு கெட்டவன் என்றப்பெயரில் சிம்பு இயக்குவதாக இருந்தப் படம்தான் இது. அப்போது கௌதம் மேனனின் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இந்தப் படம் எடுக்கும் முடிவை தள்ளிவைத்தாராம் சிம்பு. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில், வழக்கமான கமர்ஷியல் ஹீரோ என்பதை கடந்து, ஒரு அசத்தலான காதல் மன்னனாக வந்து கலக்கியிருப்பார் சிம்பு. இந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
இதனால், இதே போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க முடிவெடுத்தார் சிம்பு. அந்தவகையில் அமைந்த படங்கள்தான் ‘வானம்’, ‘போடா போடி’.

‘போடா போடி’யின் படப்பிடிப்பு லண்டனின் நடைப்பெற்று வருகிறது. இதனால்தான் ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் கல்யாணத்துக்கு சிம்பு வரமுடியாமல் போனதாம். ரஜினியின் தீவிர ரசிகன் என்றவகையில், சூப்பர் ஸ்டார் வீட்டுக் கல்யாணத்திற்கு லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. சௌந்தர்யாவின் கல்யாணத்தில், சூர்யா தவிர இளம் முன்னணி நடிகர்கள் யாருமே வரவில்லை .
லண்டனில், போடா போடியின் படப்பிடிப்பிற்கிடையே ‘வாலிபன்’ படத்திற்கான போட்டோ செஷனையும் முடித்துள்ளார் சிம்பு. இதற்காக சிம்புவுக்கு பிடித்தமான போட்டோகிராபர் லண்டனுக்கே வரவழைக்கப்பட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து வாலிபனின் கதை, திரைக்கதை பணிகளையும் அங்கேயே முடித்திடவும் சிம்பு திட்டமிட்டுள்ளாராம்.(ஒரே கல்லில் மூன்று மாங்காவா.)
போடா போடியின் லண்டன் படப்பிடிப்பு விரைவில் முடியவுள்ளது. முடிந்தவுடன் சென்னை வரும் சிம்புவுக்காக வானம் படக்குழு தயாராக உள்ளது. சிம்புவின் 20 நாள் கால்ஷீட்டுடன் வானம் படத்தில் சிம்புவுக்கான அனைத்து காட்சிகளும் முடிவடைகிறது. அதை முடித்தவுடன் மீண்டும் போடா போடிக்காக லண்டன் பறக்கிறார் சிம்பு. இந்தப் படம் முடிந்த வேகத்தோடு வாலிபன் வளர ஆரம்பித்து விடுவானாம்.
அப்போ... இன்னொரு மன்மதன் ரெடியா.
0 comments:
Post a Comment