Saturday, September 25, 2010

சினிமாவில் இருந்து ஓய்வுபெறுகிறார் ஐஸ்

பாலிவுட்டின் பரபரப்பான காதல் ஜோடிகளில் ஒன்றான அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராய் ஜோடி, 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் தனது நடிப்பை தொடர்ந்து வந்தார். திருமணத்திற்கு பிறகு ஜோதா அக்பர், சர்கார் ராஜ் உள்ளிட்ட மெகா ஹிட்டான பாலிவுட் படங்களிலும் பிங்க் பன்தர் 2 என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்தார். தற்போது ரிலீசாகி சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் மணிரத்னத்தின் ராவணன் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்திலும் ஐஸ்வர்யா நடித்துள்ளார். 2006ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய குரு படத்தில் நடித்த போது தான் அபிஷேக்கிற்கும்- ஐஸ்வர்யாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தமிழ் படம் ஒன்றில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய், 2 இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இந்திய படங்கள் இரண்டின் படபிடிப்புகளும் முடிந்து, வெளியிடும் தேதிக்காக காத்திருக்கிறது. இந்த சமயத்தில் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருக்கிறார் என்னும் செய்தி வெளியாகி உள்ளது. இதனால் தான் ராவணன் படத்தில் இறுக்கமான உடைகளை போடாமல், லூசான ஆடைகளையே தேர்வு செய்துள்ளார். அதுமட்டுமின்றி தற்போது அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும் லூசான ஆடைகளையே அணிந்து வருகிறார். ஐஸ்வர்யாவிற்காக தனது படப்பிடிப்பை சீக்கிரம் முடிக்கும் பணியில் ஷங்கர் இறங்கி உள்ளார். இந்த படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஓய்வுபெற ஐஸ்வர்யா ராய் தீர்மானித்துள்ளார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails