Sunday, September 26, 2010

சிந்துசமவெளி அனகாவின் ஸ்பெஷல் ப்ளான்!

சிந்து சமவெளி படத்தில் மாமனார் மீது மோகம் கொள்ளும் கேரக்டரில் நடித்ததன் மூலம் பெண்கள் அமைப்பின் எதிர்ப்பையும், இளம் ரசிகர்களின் ஆதரவையும் சம்பாதித்துக் கொண்டவர் நடிகை அனகா பால். பள்ளிக்கூட மாணவி, புது மனைவி, மாமனாரின் ஆசை நாயகி என பல பரிணாமம் காட்டி நடித்திருந்த அனகா அடுத்து நடித்திருக்கும் படம் மைனா. பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் அனகா, அமலா பால் என்ற பெயரில் நடித்துள்ளார். (அம்மணியின் ஒரிஜினல் பெயரே அமலா பால்தான்).
ஏற்கனவே மைனா படத்தின் பிரஸ் மீட்டிற்கு அம்மணிக்கு தடை போட்ட டைரக்டர், மைனா இசை வெளியீட்டிலும் அனகாவை பங்கேற்க விடாமல் ‌தடை போட்டு விட்டாராம். சிந்து சிந்து சமவெளியில் ஏடாகூட மருமகளா நடித்திருந்ததால் தனது மைனா பட பிரமோஷன்களுக்கோ விழாவுக்கோ வர வேண்டாம் என்று கூறிவிட்டாராம் பிரபு சாலமன். ஆனால் அப்படியெல்லாம் அவரு சொல்லவே இல்ல. என்னாலதான் வர முடியல என்கிறார் இந்த அழகு அமலா அலைஸ் அனகா. யுனிவர்சிடி டெஸ்ட் இருந்ததால்தான் வரமுடியவில்லை என்ற நம்பும்படியான காரணத்தை சொல்லும் அனகா, ஸ்பெஷல் ப்ளான் ஒன்றையும்‌ சைலண்ட்டாக செயல்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் சென்னைக்கு வந்து ஸ்பெஷலாக ஒரு போட்டோ செஷன் செய்துவிட்டு திரும்பியிருக்கிறார். போட்டோ செஷன் வழக்கமாக நடக்குறது‌தானேன்னு நினைச்சுடாதீங்க. ரொம்பவே கவர்ச்சியா போஸ் கொடு்த்துவிட்டு சென்றதோடு, அந்த ஸ்டில்களை சினிமா வட்டாரங்களில் உலா வரவிட்டிருக்கிறார். ஏனாம்?  மைனா படத்தில் அம்மணிக்கு கிராமத்து மைனா வேடம். தனக்கு வில்லேஜ் கேர்ள் இமேஜ் வந்து விடக்கூடாது என்பதால்தான் இந்த முன்னேற்பாடாம். பொழைச்சுப்பீங்க அனகா!

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails