Thursday, September 23, 2010

இடியெட்ஸ் ரீமேக்கில் தமன்னா

ஹிந்தியில் வெளியாகிய '3 இடியட்ஸ்' படம் பொலிவூட் திரையுலகில் பல சாதனைகளை தனதாக்கிக் கொண்டது. நடந்துமுடிந்த 'ஐஃபா' திரைப்பட விருது வழங்கும் விழாவிலும் பல விருதுகளை இத்திரைப்படம் தட்டிச் சென்றமை நினைவிருக்கலாம்.

இந்நிலையில் '3 இடியட்ஸ்' படத்தினை தமிழில் ரீமேக் செய்யவிருக்கிறார்கள். இப்படத்தினை இயக்கவிருப்பவர் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர். கதாநாயகர்கள் பற்றிய சர்ச்சைகள் இன்னமும் குறைந்தபாடில்லை. தமிழ் திரையுலகின் மூன்று முன்னணி நாயகர்களை இப்படத்தில் நடிக்கவைக்கும் முயற்சிகள் நடந்துவருகின்றன. விஜய், மாதவன், சிம்பு ஆகிய மூவரும் '3 இடியட்' களாக நடிக்கவிருப்பதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மாதவன், '3 இடியட்ஸ்' தமிழ் பதிப்பில் நடிக்கப்போவதில்லை என ஏற்கனவே மறுத்திருந்த நிலையில், ஷங்கரின் அழைப்பினை ஏற்று இறங்கி வந்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

கதாநாயகர்கள் பிரச்சினைதான் இப்படியென்றால் கதாநாயகி பிரச்சினையும் குறைந்தபாடில்லை. தமன்னா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருப்பதாக அரசல்புரசலாக தகவல் கசிந்திருக்கிறது. ஆனாலும் தமன்னா தரப்பு அதனை மறுத்திருக்கிறது.

ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவாகவிருக்கும் '3 இடியட்ஸ்' படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவிருக்கிறார். 'எந்திரன்' வெளியாகியதும் '3 இடியட்ஸ்' தமிழ் படத்தினை தொடங்கவிருக்கிறார் ஷங்கர்

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails