பொள்ளாச்சி அருகே நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ஆறாவது வனம் என்ற படம் தயாராகி வருகிறது. படத்தின் கதைப்படி, ஒரு கிராமத்தில் ஒரே ஒரு மனிதர் மட்டும் வசித்து வருகிறார். அந்த கிராமம் அப்படி வெறிச்சோடி கிடப்பதற்கு காரணம் என்ன? என்பதே இந்த படத்தின் கரு. இதில் புதுமுகங்கள் பூஷண் -வித்யா நாயகன் - நாயகியாக நடிக்கிறார்கள். கே.பாக்யராஜின் உதவியாளர் புவனேஷ் இயக்குகிறார். எஸ்.எம்.தியாகராஜன் தயாரிக்கிறார்.
கதைப்படி, நாயகனும், நாயகியும் வேறு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். இவர்களின் காதல் விவகாரம் தெரிந்ததும், 2 சாதியை சேர்ந்தவர்களும் ஒருவரையொருவர் வெட்டி சாய்க்க துடிக்கிறார்கள். கதாநாயகன் பூஷண், கதாநாயகியின் தாய்மாமனை வெட்டி சாய்ப்பதற்கு அரிவாளுடன் பாய்ந்து வருகிறான். அதைப்பார்த்த கதாநாயகி வித்யா, தாய் மாமனையும் காப்பாற்ற வேண்டும்....காதலனையும் கொலைப்பழியில் இருந்து காப்பாற்ற வேண்டும்... அதற்கு என்ன செய்யலாம்? என்று யோசிக்கிறார். கதாநாயகனின் மனதை மாற்றுகிற மாதிரி ஏதாவது செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறாள். உடனே, அரிவாளுடன் பாய்ந்து வரும் கதாநாயகன் பூஷணை கட்டிப்பிடித்து, உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுக்கிறார்.
இந்த காட்சியை படமாக்க இயக்குனர் புவனேஷ் திட்டமிட்டார். முத்தம் கொடுப்பது பற்றி நாயகியிடர், டைரக்டர் விளக்கினார். முதலில் உதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுக்கத் தயங்கிய அறிமுக நாயகி வித்யா, பின்னர் ஒப்புக் கொண்டார். பொள்ளாச்சி அருகில் உள்ள மலைப்பகுதியில் பொதுமக்கள் 2 ஆயிரம் பேர்களுக்கு மத்தியில், அந்த முத்த காட்சி படமாக்கப்பட்டது. நடித்து முடித்ததும், வித்யா முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுதார். அழுதபடியே அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு போய் விட்டார். அங்கு போனபிறகும் அவர் அழுகையை நிறுத்தவில்லை. டைரக்டர் புவனேஷ் ஓட்டலுக்கு சென்று வித்யாவை சமாதானப்படுத்தி, படமாக்கப்பட்ட காட்சியை `மானிட்டரில்' திரையிட்டு காண்பித்தார். விரசம் இல்லாமல் அந்த முத்த காட்சி படமாக்கப்பட்டு இருந்ததால், வித்யா சமாதானம் ஆனார். இந்த சம்பவத்தால் பொள்ளாச்சி மலைப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது
Tuesday, September 28, 2010
முத்த காட்சியில் நடித்துவிட்டு கதறி அழுத நடிகை
Author: manikandan
| Posted at: 4:38 AM |
Filed Under:
Kollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment