Thursday, September 23, 2010

இது ரொம்ப உயரமான காதல்

ஆயிரம் யானைகள் படத்தில் லயன் நடிகருக்கு ஜோடியாக அறிமுகமானவர் இந்த நடிகை. தலயுடன் ஒரிஜினல் படத்திலும் ஜோடி போட்டுள்ளார். தமிழ் சினிமாவில் உயர்ந்த இடத்தை பிடிக்கவேண்டும் என்று ஆசைப்படும் இவருக்கு அவரது உயரமே எதிரியாக இருக்கிறது.

நம்ம உயரத்திற்கு இதெல்லாம் செட்டாகாது என ஹீரோக்கள் பலர் நிராகரிக்கின்றனர். இவருக்கும் ஆயிரம்யானைகள் இயக்குனருக்கும் இடையே 'இது' இருப்பதாக வந்த கிசுகிசுவில் துளியும் உண்மையில்லை. நடிகை சினிமாவிற்கு வருவதற்கு முன்பே ஸ்டில் கேமிராமேன் ஒருவருடன் நெருக்கமான நட்பு இருக்கிறதாம்.

இவர்தான் அந்த நடிகையின் படங்களையெல்லாம் எடுப்பார். ஆரம்பத்தில் போட்டோகிராபருடன் நட்பாக பழகிவந்த நடிகையின் மனசுக்குள் இப்போது காதல் 'க்ளிக்' காகிவிட்டதாம். மும்பை ஹோட்டல்களில் அடிக்கடி தனது காதலருடன் சுற்றிவருகிறாராம் நடிகை. விரைவில் காதலனை கைப்பிடித்து இல்லறத்தில் நுழையும் ஆசையும் வந்துவிட்டதாம் நடிகைக்கு

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails