கடந்த வாரம்தான் அந்த படம் ரிலீஸ். முதல் ஒரு வாரத்திற்கு சென்னை, மதுரை, கோவை தியேட்டர்களில் டிக்கெட் ரிசர்வேஷன் ஃபுல். உள்ளே போன ரசிகர்கள் ஒரேயடியாக சிரித்து சிரித்து சிலாகிக்கிறார்கள்!
இந்த தகவல்கள் எல்லாம் உடனுக்குடன் இவரது காதுக்கு வர வர, தீயணைப்பு வண்டி வந்துதான் இவரது புகைச்சலை அணைக்க வேண்டும் போலிருக்கிறது. அத்தனை ஹாட்டாக இருக்கிறார் மனுஷன்.
இதே கதையை அப்படத்தின் டைரக்டர் தன்னிடம் சொன்னபோது, 'எல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனால் இந்த இடத்துல இதை மாத்துலாமே? அந்த இடத்துல அதை மாத்தலாமே? அந்த சீன் எனக்கு புடிக்கல. என்ன சொல்ல வர்றேன்னா நான் சொன்ன ஏரியாவுல கொஞ்சம் கரெக்ஷன் பண்ணிட்டு வந்து நம்மள இன்னொரு முறை மீட் பண்ணுங்க சொல்றேன்' என்றார் இந்த ஹீரோ.
அட போய்யா.. நீயும் உன் ரசனையும் என்று எழுந்து வந்துவிட்டார் இயக்குனர். அந்த கதையைத்தான் வேறொரு ஹீரோவிடம் சொன்னார். அவரும் எவ்வித கரெக்ஷனும் சொல்லாமல் நடிக்க ஒப்புக் கொண்டார். படம் ஹிட்டோ ஹிட்.
இதையெல்லாம் கேள்விப்பட்டால் வெந்து தணியாது மனுஷனுக்கு? எரிச்சலை அடக்க எக்ஸ்ட்ரா ஒரு மணி நேரம் தியானம் செய்கிறாராம்.
படிக்கிற போதே படம் என்னன்னு யூகிச்சிருப்பீங்க. பாஸ் என்கிற பாஸ்கரன்தான் அது. அந்த ஹீரோ? பேர சொன்னாலும், நான் அவனில்லைன்னுதான் சொல்லப் போறாரு!

0 comments:
Post a Comment