2009ஆம் ஆண்டிற்கான (57வது தேசிய விருது) தேசிய விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. 'பா' படத்தில் சிறப்பாக நடித்த அமிதாப் பச்சானுக்கு 2009 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகர் விருது கிடைத்துள்ளது.
'அபோஹோமன்' என்ற பெங்காலி படத்தில் நடித்த அனன்யாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. சிறந்த பிரந்திய மொழிப் பிரிவில் தமிழ் படமான 'பசங்க' படத்திற்கு கிடைத்துள்ளது. மேலும் சிறந்த குழந்தை நட்சத்திர நடிகர்களாக பசங்க படத்தில் நடித்த ஜீவா, அன்புக்கரசு-க்கு தேசிய விருது கிடைத்துள்ளது. தேசிய விருதுகள் விவரம் பின்வருமாறு :
சிறந்த நடிகர் : அமிதாப் பச்சான்('பா' - இந்தி படம்)
சிறந்த நடிகை : அனன்யா('அபோஹோமன்' - பெங்காலி படம்)
சிறந்த படம் : குட்டி ஸ்ரங்க் (மலையாளப் படம்)
சிறந்த பிரந்திய மொழிப் பிரிவு - தமிழ் : பசங்க
சிறந்த பின்னணி இசை : இளையராஜா - பழிசி ராஜா படத்திற்காக
சிறந்த பொழுதுபோக்குப் படம் : 3 இடியேட்ஸ்
சிறந்த குழந்தை நட்சத்திர நடிகர் : ஜீவா, அன்புக்கரசு (பசங்க - படத்திற்காக)
சிறந்த இசையமைப்பாளர் : அமீத் திரிவேதி (தேவ்-டி படத்திற்காக)
சிறந்த வசனகர்த்தா : பாண்டிராஜ்(பசங்க)
சிறந்த இயக்குநர் : ராஜ்குமார் ஹிராணி (3 இடியேட்ஸ்)
Friday, September 24, 2010
57வது தேசிய விருதுகள் - அமிதாப்பிற்கு சிறந்த நடிகர் விருது!
Author: manikandan
| Posted at: 1:57 AM |
Filed Under:
Bollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment