விபசாரத்தில் ஈடுபட்ட 2 நடிகைகள் ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர். ஐதராபாத் நகர் குந்தன்பாக் பகுதியில் விபசாரம் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் அமைச்சர்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள ஒரு அபார்ட்மென்டில் விபசாரம் நடப்பது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் விபசாரத்தில் ஈடுபட்டதாக 9 பேரை கைது செய்தனர்.
பிரபல தெலுங்கு நடிகைகளான ஜோதி, சைராபானு ஆகியோரும், ரஷ்ய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். விபசார விடுதியை நிர்வகித்து வந்தது சினிமா தயாரிப்பாளர் ஜுவ்வலராஜு என்பது விசாரணையில் தெரியவந்தது. நடிகை ஜோதி பெள்ளாம் ஊரெலிதே, எவடிகோல வாடிதே போன்ற தெலுங்கு படங்களிலும், நடிகை சைராபானு பொம்மரில்லு, ஆரோஜே வந்த கோட்லு, கிக் போன்ற பிரபல தெலுங்கு படங்களிலும் நடித்து பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விபசாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகைகளை விடுவிக்கக் கோரி அரசியல்வாதிகளிடம் இருந்து நெருக்கடி வந்ததாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sunday, September 26, 2010
விபசாரத்தில் ஈடுபட்ட 2 நடிகைகள் கைது
Author: manikandan
| Posted at: 1:59 AM |
Filed Under:
Kollywood News
|
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment