டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் மங்காத்தா படத்தில் மேலும் 2 நடிகைகள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். மங்காத்தாவில் அஜித் ஜோடியாக நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் நடிகை நீது சந்திரா. யாவரும் நலம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர், சிலபல காரணங்களால் மங்காத்தாவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதையடுத்து நடிகை த்ரிஷா நாயகியாக கமிட் ஆகியிருக்கிறார். கிரீடம் படத்தை தொடர்ந்து அஜித் - த்ரிஷா ஜோடி சேரும் இப்படத்தில் த்ரிஷா தவிர மேலும் 2 நடிகைகள் ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். அவர்கள் லட்சுமிராய் மற்றும் வேதிகா.
இதுபற்றி படத்தின் டைரக்டர் வெட்கட்பிரபு கூறுகையில், மங்காத்தா படம் இதுவரை வெளியான அஜித் படங்களிலேயே ரொம்ப வித்தியாசமான படமா இருக்கும். அஜித் நடிப்பிற்கு தீனி போடும் வகையில் காட்சிகள் உள்ளன. அஜித் கேரக்டரில் ஒரு பிரஷ் பீல் இருக்கும். ரொம்ப கலர்புல்லா இருப்பார். அதற்கேற்றார்போல மேலும் 2 நாயகிகளை கமிட் பண்ணியிருக்கிறோம். லட்சுமிராய், வேதிகா ஆகியோரது நடிப்பும் பேசும்படி இருக்கும். த்ரிஷாவை கேட்கவே வேண்டாம். மூன்று நாயகிகளுடன் அஜித் நடிக்கும் இப்படம் ஆக்ஷன் கலந்த காதல், காமெடி படம், என்றார்.
Sunday, September 26, 2010
மேலும் 2 குளுகுளு நடிகைகள்! மங்காத்தா அஜித் கலகல!!
Author: manikandan
| Posted at: 1:56 AM |
Filed Under:
ajith,
Kollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment