வித்தியாசமான கதையம்சத்துடன் கூடிய படங்களில் நடிப்பதை புதுப் பழக்கமாக்கிக் கொண்டுள்ள ரமணா, தான் நடித்து வரும் தொட்டுப் பார் படத்தில் அரவாணி வேடத்தில் வில்லத்தனம் காட்டுகிறாராம். இதுதான் இப்போது கோலிவுட்டின் பேச்சாக உள்ளது.
மிகுந்த ஈடுபாட்டுடனும், கடும் உழைப்பையும் காட்டி ரமணா நடித்து வருவதை யூனிட்டே பாராட்டுகிறதாம்.
இந்த ரோலில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் கே.வி.நந்து ரமணாவை அணுகியபோது ரமணாவின் தந்தை சற்றுயோசித்துள்ளார். ஒரு வளரும் நாயகன் இப்படிப்பட்ட வேடத்தில் நடிப்பதை எந்த தந்தைதான் ஏற்றுக் கொள்வார்.
ஆனால் ரமணாவோ நானே நடிக்கிறேன் என்று கூறி விட்டாராம். அத்தோடு நில்லாமல் இந்த கேரக்டருக்கான மேக்கப்பிலும் அதிக ஆர்வம் காட்டி அசத்தலான கெட்டப்புடன் வந்து நின்றுள்ளார். தற்போது அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறாராம்.
தோல்பாவை தியேட்டர்ஸ் வழங்கும் பெரும் பட்ஜெட் படம் தான் தொட்டுப் பார். தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இப்படத்தை வாங்கி விநியோகிக்கிறார். அக்டோபர் 15ம் தேதி படம் திரைக்கு வருகிறது.
புதுமுகம் வித்தார்த் நாயகனாகவும், லக்ஷ்னா நாயகியாகவும் நடித்துள்ளார். அனுஹாசன், விஎம்சிஹனீபா, உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வில்லனாக வருகிறார் ரமணா- அரவாணி வேடத்தில்.
ரமணாவின் கேரக்டர்,வித்தியாசமான கதையமைப்பு, கலைப்புலி தாணுவின் விநியோகம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருப்பதால் படம் குறித்து இப்போதே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Thursday, October 7, 2010
தொட்டுப் பார் படத்தில் அரவாணி வேடத்தில் வருகிறாராம் நடிகர் ரமணா.
Author: manikandan
| Posted at: 3:08 AM |
Filed Under:
Kollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment