நடிகர், நடிகைகள் டுவிட்டர், பேஸ்புக் என இணையதளம் மூலம் நண்பர்கள், ரசிகர்களுடன் பேசிக்கொள்வது அதிகரித்து வருகிறது. தமிழ் நடிகைகள் பலர் டுவிட்டரில் இணைந்துள்ளனர். இதிலிருந்து மாறுபடுகிறார் காஜல் அகர்வால். ‘டுவிட்டர், பேஸ்புக்கில் இணைவதில் தனக்கு உடன்பாடில்லை’ என்கிறார்.
இது பற்றி காஜல் அகர்வால் கூறியது: என்னைப் பொருத்தவரை கம்ப்யூட்டரை எனது அத்தியாவச¤ய தேவைக்காக மட்டுமே பயன்படுத்துகிறேன். உதாரணத்துக்கு மெயில் பார்ப்பது, ஏதேனும் தகவலை பெறுவது போன்றவற்றுக்காக இணையதளத்தை பயன்படுத்துகிறேன். டுவிட்டரில் சேர்ந்து எனது தினசரி நடவடிக்கைகளை எழுதுவது, கருத்துகளை சொல்வது எனக்கு பிடிக்காத விஷயம். எனது சொந்த விஷயங்களை நான் ஏன் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்? டுவிட்டரில் தங்கள் கருத்துகள், அன்றாட பணிகள் தொடர்பாக சிலர் எழுதுகிறார்கள். அவர்களுக்கு நான் எதிரி கிடையாது. அதே நேரம், எனக்குப் பிடிக்காத ஒன்றை, பிறர் செய்கிறார்கள் என்பதால் நானும் செய்ய மாட்டேன். இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
Wednesday, October 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment