தீபாவளி என்றால் ஞாபகத்துக்கு வரும் புத்தாடை, இனிப்பு, பட்டாசு வரிசையில் ஹைலைட் புதுப்படங்கள் வெளியீடுதான். இந்த ஆண்டு சரவெடியென அதிரவைக்க முன்னணி நடிகர்களின் படங்கள் பல களமிறங்குகின்றன.

சூர்யாவின் ரத்த சரித்திரம், தனுஷின் உத்தமபுத்திரன், ஆர்யாவின் சிக்குபுக்கு, அர்ஜூனின் வல்லக்கோட்டை, சிம்பு-பரத் நடித்துள்ள வானம், பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா, சிவாவின் “வ” குவார்ட்டர் கட்டிங் ஆகிய படங்கள் திரைத்தீபாவளி கொண்டாடுகின்றன.
ரத்த சரித்திரம் - சூர்யா, விவேக் ஓபராய், பிரியாமணி நடித்துள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. இரண்டு தாதாக்கள் சண்டை பற்றிய உண்மை சம்பவத்தை வைத்து ராம்கோபால் வர்மா இந்த படத்தை இயக்கியுள்ளார்.
உத்தமபுத்திரன்- தனுஷ், ஜெனிலியா நடித்துள்ளனர். இயக்கம் மித்ரன் ஜவஹர். தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய “ரெடி” படத்தின் ரீமேக்கே உத்தம புத்திரன்.
சிக்கு புக்கு- ஆர்யா, ஸ்ரேயா நடித்துள்ள இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் கே.மணிகண்டன் இயக்கியுள்ளார். சிக்கு புக்கு ஒரு காதல் பயணம்.

வல்லக்கோட்டை - படத்தில் அர்ஜுன், ஹரிப்ரியா நடித்துள்ளனர். ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ளார். வல்லகோட்டை ஒரு அதிரடி கோட்டை.
வானம் - சிம்பு, பரத், பிரகாஷ் ராஜ், அனுஷ்கா, சினேகாவுல்லால், வேகா, சோனியா அகர்வால் ஆகியோர் நடித்துள்ள மாறுபட்ட கதையமைப்புள்ள படம். இயக்கம் கிரிஷ்.
மைனா- விதார்த், அமலாபால் ஜோடியாக நடித்துள்ளனர். பிரபு சாலமன் இயக்கியுள்ளார். சிறு வயதிலேயே நட்பாக பழகுபவர்கள், வளர்ந்ததும் காதல் வயப்படுவதும் அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்தான் கதை.
“வ” குவார்ட்டர் கட்டிங் காமெடி படமாக உருவாகியுள்ளது. சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். தயாநிதி அழகிரி தயாரித்துள்ளார்.
இதே போல, சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி, பட்டாபட்டி 50 - 50, புலிவேஷம், கனிமொழி போன்ற 20 படங்கள் திரைப்பண்டிகைக் கொண்டாடவுள்ளன.
தீபாவளிக்கு பிறகும் ரசிகர்களுக்கு இனிப்பு விருந்து தர கமலின் ‘மன்மதன் அம்பு’ படம் டிசம்பர் வெளியிடப்படவுள்ளது.
மேலும் விஜய்யின் ‘காவலன்’ படமும் டிசம்பரில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியாகிறது. இந்த வரிசையில் ஜெயம் ரவியின் எங்கேயும் காதல், கார்த்தியின் சிறுத்தை, ஜீவாவின் ‘கோ’, சேரன் நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள ‘யுத்தம் செய்’ படங்களும் நவம்பர், டிசம்பர் மாதங்களில திரைவிழா கொண்டாடவுள்ளன.
தீபாவளி சரவெடி புதுப்படங்கள் அதிரடி...
0 comments:
Post a Comment