6வது தேசிய ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் டேக்வாண்டோ போட்டிகளில் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் மகனும், மகளும் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். ஷாருக்கான்-கெளரி தம்பதிக்கு ஆர்யன் என்ற 13 வயது மகனும், சுஹானா என்ற 10 வயது மகளும் உள்ளனர். இருவரும் டேக்வாண்டோவில் தீவிரப் பயிற்சி பெற்றவர்கள். மும்பையில் நடந்த தேசிய ஜூனியர் பிரிவில் ஆர்யனும், சப் ஜூனியர் பிரிவில் சுஹானாவும் தங்கப் பதக்கம் வென்று அசத்தினர்.
மகனும், மகளும் கலந்து கொண்ட இந்தப் போட்டியை ஷாருக் கான் தனது மனைவி கெளரியுடன் சேர்ந்து ரசித்து மகிழ்ந்தார்.
மகனும், மகளும் கலந்து கொண்ட இந்தப் போட்டியை ஷாருக் கான் தனது மனைவி கெளரியுடன் சேர்ந்து ரசித்து மகிழ்ந்தார்.
0 comments:
Post a Comment