
இன்னும் ஷீட்டிங்கே முடியவில்லையா. அப்போ படம் எப்ப ரீலீசய்யா என்று எந்திரன் பற்றி இனியும் அலுத்துக்கொண்டிருக்க தேவையில்லை. எந்திரன் ஷீட்டிங் முழுவதும் முடிந்துவிட்டது.
இரண்டு நாள் ஷீட்டிங் நடந்துவிட்டால் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்ற நிலை இருந்தது. ஐஸ் கர்ப்பமாகிவிட்டதால் அந்த இரண்டு நாள் கால்ஷீட் தாமதமாகிக்கொண்டே இருந்தது.
டாக்டரின் ஆலோசனையின் படி இரண்டு நாள் சென்னை வந்து ஷீட்டிங்கை முடித்து கொடுத்துவிட்டார் ஐஸ்.

ஷங்கர் இதுவரை டைரக்ட் செய்த படங்களிலேயே அதிக பட்ஜெட் எடுத்துக்கொண்டது எந்திரன்தான். ஆனால் அதிகம் சென்னையிலேயே படமாக்கப்பட்டதும் இந்தப்படம் தான்.
சென்னையைச்சுற்றி சுற்றி படமாக்கியிருக்கிறார். ஆனால் திரையில் பார்க்கும் போது இது சென்னைதானா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்துமாம்.

படத்தின் முதல் நாள் ஷீட்டிங் நடந்ததும் சென்னையில்தான். இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் சென்னையில்தான்.
தனது படத்தில் ஐஸ்ஸை எப்படியாவது நடிக்க வைத்துவிட வேண்டும் என்று தொடர் முயற்சி செய்தார் ரஜினி. எந்திரன் படத்தில்தான் அது நடந்தது.
ஐஸ் தனது படத்தில் நடிக்க வந்ததே பெரிய விசயம் என்று நினைத்திருந்தார் ரஜினி. ஆனால் ரஜினியுடன் நடித்த அனுபவத்தில் அவருக்கு இருக்கும் மாஸ் பற்றி நேரில் தெரிந்துகொண்டதும் ரஜினியுடன் நடித்ததை பெரிய விசயமாக கருதுகிறார் ஐஸ்.

அமிதாப்பும், ரஜினியும் நெருங்கிய நண்பர்கள். அமிதாப் சென்னை வந்தால் முதலில் சந்திப்பது ரஜினியைத்தான். அதனால் அமிதாப்பின் மருமகள்
பதிலுக்கு ஐஸ் இறுதி நாள் படப்பிடிப்பின் போது யாரும் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு ஒரு காரியம் செய்தார். ரஜினி காலில் விழுந்து ஆசி வாங்கியபோது ரஜினி கண்கள் கலங்கிவிட்டது.
நல்லா இரும்மா...நீயும் எனக்கு மருமகள்தான் என்று வாழ்த்தினார்.
0 comments:
Post a Comment