காதலர்களின் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் இச்சமூகமே காரணம். ஒரு ஞாயிற்றுக்கிழமையை கொண்டாடுகிற சமூகம் காதலை மட்டும் ஏன் தண்டிக்கிறது என்ற கேள்விக்கு பதில் கேட்டுத்தான் என் படத்தை தொடங்கியிருக்கிறேன்... என்கிறார் கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படத்தை இயக்கியிருக்கும் பாடலாசிரியர் ஏகாதசி. பரணி இசையில் மொத்த பாடல்களையும் எழுதி, முதன் முதலாக இயக்குனராகவும் அறிமுகமாகும் ஏகாதசி, பாரதிராஜாவில் தொடங்கி பல இயக்குனர்களிடம் இயக்குனர் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீரசேகரன் எனும் ஆர்ட் டைரக்டர் வீரசமர் நடித்து சமீபத்தில் வெளிவந்த படத்தை தயாரித்த சிங்கப்பூரை சேர்ந்த எப்.சி.எஸ். கிரியேஷன்ஸ் தூவார் ஜி.சந்திரசேகரன் மிகுந்த பொருட்செல்வில் இந்த படத்தை தயாரிக்கிறார். வீரசேகரன் படம் தந்தை (தோல்வி) பாடம், இப்படத்தை நிச்சயம் வெற்றிப்படமாக்க உதவும் எனும் சந்திரசேகரன், இதைத்தொடர்ந்து எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில், பார்க்கணும்போல இருக்கு என்ற பெயரில் மெகா பட்ஜெட் படத்தை தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tuesday, October 5, 2010
சிங்கப்பூர்காரரின் கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை!
Author: manikandan
| Posted at: 12:50 PM |
Filed Under:
Kollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment