Thursday, October 7, 2010

இந்தியக் குழந்தையைத் தத்தெடுக்கும் ஜூலியா ராபர்ட்ஸ்!

இந்தியக் குழந்தையைத் தத்தெடுக்கிறார் ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ்.

ஹாலிவுட் திரையுலகில் முன்னணியில் உள்ள நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் (41). இவரது கணவர் டேன்னி மூடியர் (42). இவர்களுக்கு ஹாஷெல், பின் என்ற இரட்டையர்களும் மற்றும் ஹென்றி என்ற குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் ஈட் பிரே லவ் என்ற ஆங்கிலப் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் சில காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட உள்ளன.

இதற்காக அவர் இந்தியா வரவிருக்கிறார். இந்தப் பயணத்தின்போது ஒரு இந்திய குழந்தையை தத்தெடுக்கத் திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் ஜூலியா ராபர்ட் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறுவதாக அறிவித்தது நினைவிருக்கலாம்.

ஏற்கனவே வெளிநாட்டில் ஒரு குழந்தையை தத்தெடுக்க ஜூலியா ராபர்ட்டும் அவரது கணவர் டேன்னியும் முடிவு செய்திருந்தனர். அதற்கு இந்திய குழந்தைதான் ஏற்றது. அக் குழந்தைதான் அன்பு மற்றும் பாசத்துடன் திகழும் என கருதுதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails