
காங்கிரஸ் கட்சி சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரில் தேசிய ஒருமைப்பாடு விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுக்கான (2009) இந்த விருது, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளரும், ஆஸ்கார் விருது பெற்றவருமான ஏ.ஆர்.ரகுமானுக்கு கிடைத்துள்ளது.
அவருடன் சேர்த்து ராமகிருஷ்ணா ஆசிரமத்தின் நாராயண்பூர் (சதீஷ்கார்) கிளைக்கும் இந்த விருது பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இந்த விருது ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு பத்திரத்தை கொண்டதாகும்.
வருகிற அக்டோபர் மாதம் 31-ந்தேதி டெல்லியில் நடைபெறும் இந்திராகாந்தி நினைவு நாளின்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா இந்த விருதை வழங்குகிறார். காங்கிரஸ் கட்சியின் நூற்றாண்டு விழா முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, ராஜீவ்காந்தி(மறைவுக்குப் பின்), மறைந்த முன்னாள பஞ்சாப் முதல்-மந்திரி பியாந்த்சிங், முன்னாள் ஜனாதிபதிகள் அப்துல்கலாம், சங்கர்தயாள் சர்மா, பட அதிபர் ஷியாம் பெனகல், திரைப்பட கவிஞர் ஜாவீது அக்தர் போன்றவர்கள் இந்த விருதை பெற்று உள்ளனர்.
கஸ்தூரிபாய் காந்தி நினைவு தேசிய அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கும் இந்த விருது கிடைத்துள்ளது.
0 comments:
Post a Comment