அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்தைப் பிடித்ததாக கூறப்பட்ட ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படம் 12வது இடத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதேபோல இங்கிலாந்தில் அது 14வது இடத்தில் இருக்கிறது.
34வது இடத்தில் இந்தி ரோபோ
படம் வெளியிடப்பட்ட முதல் மூன்று நாள் முடிவில் அமெரிக்காவின் டாப் 20 படப் பட்டியலில் எந்திரனுக்கு 12-வது இடமும், ரோபோ தெலுங்குக்கு 17வது இடமும், ரோபோ இந்திக்கு 34வது இடமும் கிடைத்துள்ளன. மூன்று படங்களின் ஒருங்கிணைந்த பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் இன்னமும் தரப்படவில்லை.
பிரிட்டனில், எந்திரன் தமிழ்ப் படத்துக்கு 14வது இடமே கிடைத்துள்ளது. ரோபோ இந்திப் படத்துக்கு 21வது இடம் கிடைத்துள்ளது.
எந்திரன் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ஆனாலும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்தான் பெரிய அளவில் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் அமெரிக்க பாக்ஸ் ஆபீஸ் நிலவரத்தில் எந்திரன் முதலிடத்தைப் பிடித்து விட்டதாக முதலில் செய்திகள் கூறின. ஆனால் அப்படி இல்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
மேலும் இரு நாட்டு டாப் 10 பட்டியலிலும் எந்த இந்தியப் படமும் இடம் பெறவில்லை.
3 மொழிப் படங்களின் வசூல்
படம் வெளியான முதல் மூன்று நாள் முடிவில் இந்த இரு நாடுகளிலும் எந்திரன் தமிழ், ரோபோ தெலுங்கு மற்றும் இந்தியின் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன. இதுவரை எந்த இந்தியப் படமும் முதல் மூன்று நாள்களில் பெறாத வசூலை எந்திரன் / ரோபோ பெற்றுள்ளது.
அதன்படி, பிரிட்டனில் எந்திரன் தமிழ்ப்பட வசூல் ரூ. 1.96 கோடி. மொத்தம் 43 திரையரங்குகளில் இந்தப்படம் வெளியாகியுள்ளது. இதுவரை எந்தத் தமிழ்ப் படத்துக்கும் இந்த ஓபனிங் கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனில் ரோபோ இந்திப் படம் 42 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மூன்று நாள் வசூல் ரூ 43,17 லட்சம்.
பிரிட்டனில் ரோபோ தெலுங்கு வசூல் விவரம் வெளியாகவில்லை.
அமெரிக்காவில்...
அமெரிக்காவில் 64 திரையரங்குகளில் வெளியான எந்திரன் (தமிழ்) முதல் மூன்று நாட்களில் ரூ 6.81 கோடியை வசூலித்துள்ளது. இதுவரை எந்தத் தமிழ்ப் படத்துக்கும் இவ்வளவு பெரிய வசூல் இருந்ததில்லை.
ரோபோ தெலுங்குப் படம் 36 அரங்குகளில் வெளியானது. மூன்று நாளில் ரூ 2.16 கோடியை குவித்துள்ளது. ஒரிஜினல் தெலுங்குப் படங்களுக்குக் கூட கிடைக்காத வசூல் இது. ரோபோ டப்பிங் படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் 39 அரங்குகளில் ரோபோ இந்தி வெளியானது. மூன்று நாட்களில் ரூ 73.58 லட்சம் வசூலாகியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை எந்த இந்தி டப்பிங் படத்துக்கும் கிடைக்காத பெருமை இது!
அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் ரஜினியின் எந்திரன் / ரோபோ படங்கள் முதல் மூன்று நாட்களில் ரூ 12.22 கோடியை வசூலித்துள்ளன.
பாக்ஸ் ஆபீஸ் ரேங்க் நிலவரம்:
முதல் மூன்று நாள் முடிவில் அமெரிக்காவின் டாப் 20 லிஸ்டில் எந்திரனுக்கு 12-ம் இடமும், ரோபோ தெலுங்குக்கு 17வது இடமும், ரோபோ இந்திக்கு 34வது இடமும் கிடைத்துள்ளன. மூன்று படங்களின் Combined பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் இன்னமும் தரப்படவில்லை.
பிரிட்டனில், எந்திரன் தமிழ்ப் படத்துக்கு 14வது இடமும், ரோபோ இந்திப் படத்துக்கு 21வது இடமும் கிடைத்துள்ளது.
ரோபோவுடன் வெளியான அஞ்ஜானா அஞ்ஜானிக்கு பிரிட்டனில் 15வது இடமும், அமெரிக்காவில் 16வது இடமும் கிடைத்துள்ளது.
Thursday, October 7, 2010
அமெரிக்க பாக்ஸ் அபீஸ் நிலவரம்-எந்திரனுக்கு 12வது இடம்-தெலுங்குக்கு 17, இந்திக்கு 34!
Author: manikandan
| Posted at: 2:44 AM |
Filed Under:
enthiran,
Kollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment