Friday, September 24, 2010

கார்த்தி ஏர்டெல் அம்பாசிடரா?

அண்ணன் சூர்யா ஏர்செல்லின் அம்பாசிடர், தம்பி கார்த்தியை அம்பாசிடராக ஒப்பந்தம் செய்திருப்பது ஏர்செல்லின் வியாபார பகையாளி ஏர்டெல். இனி ஏர்டெல்லின் விளம்பரங்களில் கார்த்திதான் ஏர்டெல்லை உபயோகிக்கும்படி வற்புறுத்தயிருக்கிறார்.

இந்த புதிய வியாபார ஒப்பந்தம் தமிழ் உணர்வாளர்களை ரொம்பவே காயப்படுத்தியிருக்கிறது. ஈழப்போர் நடந்த நேரம் இலங்கை இனப்படுகொலை அரசுக்கு ஏர்டெல் சாதகமாக இருந்ததாகவும், அதன் படுகொலைகளை மறைக்க உதவியதாகவும் தமிழ் உணர்வாளர்கள் ஏற்கெனவே ஏர்டெல் மீது குற்றம் சுமத்தியிருக்கிறார்கள். ஏர்டெல்லை புறக்கணிக்கும் விதமாக நூற்றுக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் தங்களது ஏர்டெல் கனெக்சனை திரும்பக் கொடுத்த நிகழ்வும் தமிழகத்தில் நடந்துள்ளது.

ஏர்டெல்லுக்கு எதிரானப் போராட்டத்தை அவர்கள் மேலும் வலுவடையச் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் கார்த்தி ஏர்டெல்லின் புதிய அம்பாசிடராக பொறுப்பேற்றுக் கொண்டது ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழாவது.. உணர்வாவது.. எப்படியோ சம்பாதிச்சா போதும்னு நினைக்கிறாங்க போல...

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails