வரும் அக்டோபர் 1-ம் தேதி சென்னையில் 32 திரையரங்குகளிலும், சென்னை புறநகர் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் எந்திரன் படம் வெளியாகிறது. அண்ணா சாலையில் மட்டும் 12 திரையரங்குகளில் எந்திரன் திரையிடப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட அரங்குகளில் எந்திரன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 2250 பிரிண்டுகளுடன் 3000 அரங்குகளில் திரை விருந்து படைக்கவிருக்கிறது எந்திரன்.
அமெரிக்காவில் நேற்று முன்தினம் எந்திரனுக்கான டிக்கெட் விற்பனை துவங்கியது. விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
இந்த நிலையில் எந்திரனுக்கு தமிழகத்தில் சில குறிப்பிட்ட திரையரங்குகளில் முன்பதிவு இப்போதே ஆரம்பித்துவிட்டது. பொதுவாக ரிலீஸுக்கு மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்புதான் சென்னையில் முன்பதிவு துவங்கும்.
ஆனால் எந்திரன் வெளியாக 10 நாள் இருக்கும்போதே, சென்னையில் அபிராமி 7 நட்சத்திர தியேட்டரில் திங்கள்கிழமை மாலை துவங்கியது. முன் பதிவு பற்றிய அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. டிக்கெட் விலை ரூ 120 மற்றும் 100 மட்டுமே.
புதன்கிழமை காலை நிலவரப்படி, முதல் வாரத்துக்கான டிக்கெட்டுகள் ஒரு சில மட்டுமே இன்னும் உள்ளன. அபிராமி மெகா மாலில் உள்ள மற்ற மூன்று திரையரங்குகளிலும்கூட எந்திரனே திரையிடப்பட உள்ளது. இவற்றுக்கான டிக்கெட் முன்பதிவு இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.
மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் சில திரையரங்குகளிலும் டிக்கெட் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சத்யம் போன்ற மல்டிபிளக்ஸ்களில் இன்னும் ஓரிரு நாள்களில் எந்திரனுக்கான முன் பதிவு துவங்கவிருக்கிறது.
Thursday, September 23, 2010
எந்திரன் திரைப்படத்துக்கான டிக்கெட் முன் பதிவு தமிழகத்திலும் துவங்கியது
Author: manikandan
| Posted at: 9:00 AM |
Filed Under:
enthiran,
Kollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment