இலங்கைக்குப் போய், ராஜபக்சே அரசுக்கு ஆதரவாகப் பேசிய நடிகை அசின் விவகாரத்தை விவாதிக்கவும், அவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யவும் நடிகர் சங்க செயற்குழு நாளை கூடுகிறது.
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் செயற்குழு கூட்டத்துக்கு தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் ராதாரவி, துணைத் தலைவர்கள் மனோரமா, விஜயகுமார், பொருளாளர் வாகை சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
செயற்குழுவில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. அசின் பிரச்சினை பற்றியும் பேச உள்ளனர்.
திரைப்பட கூட்டமைப்பின் தடையை மீறி அசின் இலங்கை சென்று ரெட் இந்திப் படப்பிடிப்பில் பங்கேற்றதாலும் ராஜபக்சே அரசுக்கு ஆதரவாகப் பேசியதாலும் சர்ச்சை ஏற்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டன.
நடிகர் சங்கத்துக்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராதாரவி கூறினார்.
ஆனால் அசின் இதுவரை நடிகர் சங்கத்துக்கு விளக்கம் அளித்து கடிதம் அனுப்பவில்லை. இதனால் சங்க நிர்வாகிகள் கோபத்தில் உள்ளனர்.
அசின் தற்போது விஜய்யுடன் காவலன் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். அசின் விவகாரம் பற்றி ஒரு வாரத்தில் பேசி முடிவு செய்யப்படும் என்று பிலிம்சேம்பர் அறிவித்து உள்ளது.
அசின் மீது என்ன மாதிரி நடவடிக்கை எடுக்க கூட்டுக்குழு கூட்டத்தில் கருத்து தெரிவிப்பது என செயற்குழுவில் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது.
Saturday, September 25, 2010
அசின் மீது நடவடிக்கை என்ன... நாளை முடிவு செய்கிறது நடிகர் சங்கம்!
Author: manikandan
| Posted at: 7:59 AM |
Filed Under:
Kollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment