மைனா படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சத்யம் திரேட்டரில் இராம.நாராயணன், கமல்ஹாசன், கார்த்திக், இயக்குனர் பாலா உள்ளிட்ட விஐபிக்கள் பங்கேற், வெகுகோலாகலமாக நடந்தேறியது, கொக்கி, லீ உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை ஸ்பெஷல் ஷோவில் பார்த்து விட்டு பேசிய நடிகர் கமல், மைனாவில் நடித்திருக்கு குழந்தை நட்சத்திரங்களில் தொடங்கி, நாயகன் - நாயகி வரை ஒவ்வொருவரின் இயற்பெயரையும் பாராட்டி பேசியதுடன், களத்தூர் கண்ணம்மாவில் தான் சிறுவனாக நடித்தபோது இப்படித்தான் பலரும் தன்னை அடையாளம் கண்டு பாராட்டியதாக அகம் மகிழ்ந்தார். அதுமாதிரி பாராட்டு மைனாவில் நடித்திருக்கும் ஒவ்வொரு கலைஞனுக்கும், பணிபுரிந்திருக்கும் ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞனுக்கும் நிச்சயம் கிடைக்க வேண்டும். அவ்வளவு சிறந்த படமாக வந்திருக்கிறது என்றார்.
மேலும் பேசிய கமல், பெரிய படம், சின்ன படம் என்பதை நாம் முடிவு பண்ண முடியாது. அதை ஆடியன்ஸ்தான் முடிவு செய்ய வேண்டும். கல்பாத்தி எஸ்.அகோரம் தனது ஏஜிஎஸ் நிறுவனம் மூலமும், உதயநிதி ஸ்டாலின் தனது ரெட்ஜெயண்ட் மூலமும் இப்படத்தை தயாரித்து வாங்கி வெளியிடுவதின் மூலம் மைனா அது சென்றடைய வேண்டிய இலக்கை நிச்சயம் சென்றடையும் என்றார்.
முன்னதாக பேசிய இராம.நாராயணன், பராசக்தி படம் போல் மைனா ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார். இயக்குனர் பாலா, மைனா இயக்குனர் பிரபுசாலமன் மீதுள்ள இமேஜை இப்படம் உயர்த்தி விட்டது என்றார். எல்லோரும் கமலுடன் ஸ்பெஷல் ஷோ பார்த்தவர்கள். உதயநிதி, பெரிய பட்ஜெட் படங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல் இதுமாதிரி சின்ன பட்ஜெட் நல்ல படங்கள் மீதும் கவனம் செலுத்துவது பாராட்டுதலுக்குரிய விஷயம்தான்!
Saturday, September 25, 2010
களத்தூர் கண்ணம்மாவை நினைவுகூர்ந்த கமல்ஹாசன்!
Author: manikandan
| Posted at: 9:42 AM |
Filed Under:
kamalhasan,
Kollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment