Thursday, September 23, 2010

புற்றுநோயாளிகளுக்காக ஐஸ்வர்யாராய் நடனம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராயும், நடிகர் அக்ஷய் குமாரும் ஆடிப் பாடி மகிழ்வித்தனர்.

மும்பையில் உள்ள புற்றுநோயாளிகள் உதவிக் கழகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆடிப் பாடினார் ஐஸ்வர்யா. 'புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருளாதார ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்' என்று அப்போது கோரிக்கை விடுத்தார் ஐஸ்வர்யா.

பின்னர் தனது படங்களிலிருந்து ஒலிக்கப்பட்ட பாடல்களுக்கு ஐஸ்வர்யா டான்ஸ் ஆடினார். அவருடன் புற்றுநோயாளிகளும் ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சியின்போது பேசிய நடிகர் அக்ஷ்ய்குமார், 'எனது தந்தைக்கும் புற்றுநோய் இருந்தது. எனவே அதன் வலி எனக்கும் தெரியும்' என்றார்.

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails