Monday, September 27, 2010

அமிதாப், ரஜினிக்கு ஐஸ் புகழாரம்!

அமிதாப், ரஜினி போல எளிமையான மனிதர்களை பார்த்ததே இல்லை என ஐஸ்வர்யா ராய் புகழாரம் சூட்டியுள்ளார். சன் பிக்சர்ஸ் அதிக பொருட் செலவில் தயாரித்துள்ள படம் ‘எந்திரன்Õ. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்துள்ளனர். இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்.

"ரஜினி, அமிதாப் இந்த இரு சூப்பர் ஸ்டார்களை எவ்வாறு நீங்கள் ஒப்பீடுவிர்கள் என ஐஸ்வர்யாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இருவருமே ஒரே குணதிசயங்களை கொண்டவர்கள். ஒரு மனிதன் புகழின் உச்சியை அடையும்போது எப்படி வாழ வேண்டும் என்பது, இவர்களை பார்தது தான் கற்றுக்கொள்ள வேண்டும். அப்பாவைப் போல(அமிதாப்) ரஜினி சாரும் ரெம்ப எளிமையாக இருப்பார். உழைப்பதற்கு வயது தடையில்லை என்பதற்கு ரஜினி சார் தான் ஒரு சிறந்த உதாரணம். எந்திரன் படத்திற்காக அவர் செலவிட்ட நேரம், பொறுமை இவையெல்லாம் கணக்கில் கொள்ள இயலாது. அவரிடம் நான் கற்றுக் கொண்டது அதிகம். அவருடன் நடிக்க கிடைத்த இந்த வாய்ப்பினை நான் பாக்கியமாக கருதுகிறேன்." இவ்வாறு ரஜினி மற்றும் அமிதாப்பிற்கு ஐஸ்வர்யா ராய் புகழாரம் சூட்டினார்.

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails