ரிலீஸ் தேதியை அறிவித்ததிலிருந்து ரசிகர்களின் மனதில் எந்திரன் கவுண்டவுன் ஸ்டார்ட்டாகிவிட்டது. உலகம் முழுவதும் ஒரே நாளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.
எந்திரன் ரிலீசாவதால் மற்ற படங்கள் ஒதுங்கி வழிவிட்டுள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று எந்திரனுடன் போட்டி போடமுடியாது என்ற பயம். இன்னொன்று எல்லா தியேட்டர்களையுமே எந்திரன் ஆக்கிரமித்துக்கொண்டது. முன்பெல்லாம் ரஜினி,கமல் படங்கள் வெளியானாலும் கூடவே சில சின்ன படங்களும் வெளியாகும்.
ரஜினி,கமல் படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் தங்களின் படத்திற்கு வருவார்கள் என்ற எண்ணத்தில் சிறுபட தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை துணிச்சலாக வெளியிடுவார்கள். அந்த நிலை அடியோடு மறைந்துவிட்டது. அந்த சந்தர்ப்பத்திற்குகூட இடமளிக்காத நிலையில் எல்லா தியேட்டர்களையும் பெரிய படங்களே பிடித்துவிடுகிறது.
இதற்கிடையே எந்திரன் எத்தனை நாள் ஓடும்? என்ற பட்டிமன்றம் சினிமாக்காரர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை கிளப்பிவருகிறது. எல்லா தியேட்டர்களிலுமே எந்திரன் ரிலீசாவதால் 10 நாட்களுக்கு தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல்லாகும் என்றும் அதற்கு மேல் கூட்டம் குறைந்து தியேட்டர்கள் காத்து வாங்கும் என்றும் கணிக்கப்படுகிறது. அதிக பட்சம் இரண்டு வாரங்களோ அல்லது இருபது நாட்களோதான் எந்திரன் ஓடும் என்றும் அதன்பிறகு கெளரவத்திற்காக ஓட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் எந்திரனின் இருபது நாட்கள் வசூல், இதுவரை வந்த ரஜினி படங்களிலேயே மிகப்பெரிய வசூல் சாதனையை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது. இரண்டாம் கட்ட வெளியீட்டையும் சேர்த்து, நூறு நாள் விழாவோ முந்நூறு நாட்கள் விழாவோ நடத்தபோவது தனி கதை.
Thursday, September 23, 2010
எந்திரனை ஓட வைப்பது எப்படி ?
Author: manikandan
| Posted at: 11:31 AM |
Filed Under:
enthiran,
Kollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment