Sunday, September 26, 2010

ஆஸ்கர் விருது தேர்வு கமிட்டியில் ஏ.ஆர். ரகுமான்

உலக அளவில் தயாராகும் சினிமாக்களில் சிறந்தவற்றை தேர்வு செய்து ஆஸ்கர் விருது அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு அளிக்கப்பட்டது. இதே போல் கேரளாவை சேர்ந்த ரசூல்பூக்குட்டி என்பவரும் ஆஸ்கார் விருது பெற்றார். ஸ்லெம்டாக் மில்லினர் படத்துக்கு இருவரும் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் ஆஸ்கார் கமிட்டிக்கு வரும் படங்களை தேர்வு செய்யும் கமிட்டிக்கு ஏ.ஆர். ரகுமானும், ரசூல் பூக்குட்டியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் இருவரும் இனி வரும் ஆண்டு முதல் ஆஸ்கருக்கு விண்ணப்பிக்கும் படங்களை மதிப்பீடு செய்யும் நடுநிலையாளர்களாக செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏ.ஆர். ரகுமான் கூறுகையில், இது மிக பெரிய பொறுப்பு. இதனை நான் எதிர்பார்க்கவில்லை. இப்போது எனக்கு கூடுதல் பணி கொடுக்கப்பட்டுள்ளது. இனி இதனை திறம்பட செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருக்கும் என்றார்.

இதே போல் ரசூல்பூக்குட்டியும், ஆஸ்கர் விருது தேர்வு கமிட்டி உறுப்பினராக நியமனம் செய்தது என்னை ஆனந்த அதிர்ச்சிக்குள் ளாக்கியுள்ளது என்று தெரிவித்தார். மும்பையில் உள்ள அவரது வீட்டில் குவிந்த திரளான ரசிகர்கள் ரசூல்பூக்குட்டியை வாழ்த்தினர்.

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails