ஹாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகைகளுள் ஒருவர் கிம் கர்தார்ஷியன். நியூயார்க்கில் உள்ள ஜூலியட் சூப்பர் கிளப்பில் நடந்த டி.வி ரியாலிட்டி ஷோவுக்கான படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டிருந்தார்.
அங்கிருந்த பலர் ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஷூட்டிங் இடைவேளையில் ஒருவர் கிம்மை அணுகி, நான் உங்கள் ரசிகன், உங்கள் பக்கத்தில் நின்று போட்டோ எடுத்துக்கொள்ளலாமா என்று வேண்டுகோள் விடுத்தார்.
கிம்மும் சரியென்று சொல்லி ரசிகரை அருகே நிற்க வைத்து போஸ் கொடுக்க, ரசிகருடன் வந்த கேர்ள்பிரெண்ட் திடீரென இடையில் புகுந்து கிம்மின் கன்னத்தில் பளார் விட்டிருக்கிறார். என் பாய்பிரெண்டோட நீ எப்படி போஸ் கொடுக்கலாம் என்று கேள்வி வேறு.
எப்படியோ அவரிடமிருந்து தப்பி கன்னத்தைத் தடவிக்கொண்டே ஷூட்டிங் போய்விட்டார். கிழக்கோ மேற்கோ பெண்களின் பொஸஸிவ்னஸ் மட்டும் மாறுவதே இல்லை.
Saturday, October 23, 2010
கன்னத்தில் அறைவாங்கிய ஹாலிவுட் நடிகை
Author: manikandan
| Posted at: 4:37 AM |
Filed Under:
Hollywood News
|
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment